Friday, March 22, 2013

இலங்கையில் மலையகக் கல்வி - ஒரு பொதுவான பார்வை.

ஆக்கம் :திரு.சு கணேசன் 
                    ஒய்வுபெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளர் 
                     மொனராகலை மாவட்டம் 

மலையகக் கல்வி வரலாறு ஒரு குறுகிய வரலாறு அதாவது - இலங்கை கல்வி வளர்ச்சி வரலாற்றோடு ஒப்பிடும் பொது மலையகக் கல்வி வரலாறு பின் தோன்றிய ஒன்று என்பதை எல்லோரும் ஏற்றுக்கொள்வர்.

ஆரம்பத்தில் தேயிலை தோட்டத்தில் எல்லோரும் வேலைக்கு சென்ற பின்னர் பிள்ளைகள் தேயிலைப் பயிர்களை நாசம் செய்து விடுவார்கள் , அதாவது சிறுவர்களால் தேயிலைப் பயிர்களுக்கு  ஆபத்து வந்து விடும் என்பதற்காக பிள்ளைகளை ஒரு இடத்தில் அடைத்து வைக்க வேண்டும் என்ற தேவை தொட்ட நிர்வகத்திட்கு ஏற்பட்டது . எனவே பாடசாலை என்ற பெயரில் ஆசிரியர் ஒருவரை நியமித்து பிள்ளைகளை கல்வி கற்கும் செயல்பாடுகளில் ஈடுபடுத்தினர்  இவ்வாறு தோன்றியதே தோட்டப் பாடசாலைகளாகும்.

இவ்வாறு உதயமான தோட்டப் பாடசலைகள்   சுதந்திரத்தின் பின் தோட்ட நிர்வாகத்தின் கீழ் இயங்கி யாருடைய கவனத்தையும் கவர்வதாக இருக்கவில்லை. மிஷனரிகள் கல்வியில் காட்டிய அக்கறை காரணமாக பல பாடசாலைகள் மலையகத் தலைநகரங்களில் தோற்றம் பெற்றன.
சுய பாஷை கல்வி பாடசாலைகளில் அறிமுகமாநாதன் பின்னர் நிலைமை மாத்தரம் அடைந்ததது.

ஆங்கில மொழிக் கல்வியானது ஆங்கில நிர்வாகத்தின் தேவைகளை பூர்த்தி செய்யும் சாதாரண "கிளார்க்" மார்களை உற்பத்தி செய்வதாகவே அமைந்தது.
இதனால் "வைட் கொலர் ஜாப்" என்ற உத்தியோக இலக்கை நோக்கிய ஒரு சமுகம் உருவானது. இக்கல்வியினால் நாட்டுக்கு எந்தவித பிரயோஜனமும் இல்லை என்ற கோஷத்துடன் ஆரம்பமானது தான் சுய பாஷை கல்வித் திட்டம்.

இதன் அடிப்படையில் பாடசாலைகள் அனைத்தையும் அரசாங்கம் பொறுப்பேற்கும் நிகழ்ச்சித் திட்டம் நடைமுறை படுத்தப்பட்டது.
இதனால் ப சாதக பாதகமான நிலைமைகளை இலங்கை குறிப்பாக மலையகம் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

பாடசாலைகளை அரசாங்கம் பொறுப்பேற்றதனால் "தோட்டப் பாடசாலை" என்ற நிலை மாறி அரசாங்க பாடசாலையாக மலையகப் பாடசாலைகள் அமைந்தன. எல்லா இனத்தை சேர்ந்தவர்களும் ஒரே பாடசாலையில் கல்வி கற்ற நிலை மற்றம் பெற்று இன அடிப்படையில் பாடசாலைகள் தரம் பிரிக்கப் பட்டன. அதாவது சிங்கள, தமிழ், முஸ்லீம் பாடசாலைகள் என்ற அடிப்படையில் அமைக்கப்பெறலாயின. இதனால் சமூக ரீதியிலான மாற்றங்கள்- தாக்கங்கள் இலங்கையை வெகுவாகப் பாதித்தது.(இன்று ஆங்கில மொழி மூலக் கல்வியின் அவசியத்தை முன்னிட்டு பல சர்வதேசப் பாடசாலைகள் உருவாகி வருவதையும் நாம்  காண்கிறோம்)..

இன்றைய நிலை  என்ன? ஒரு கண்ணோட்டம் 
(தொடரும் )





No comments:

Post a Comment